டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் மத்தியப் பிரதேசத்தில் 125 மெகாவாட் மிதக்கும் சோலார் திட்டத்தை அமைப்பதற்காக NHDC லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹596 கோடி மதிப்பிலான (LoA) மொத்த ஒப்பந்த மதிப்பிற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர் நீர்த்தேக்கத்தில் அமைக்கப்படவுள்ள திட்டத்திற்கான ஏலம் கோரப்பட்டது. NHDC என்பது NHPC லிமிடெட் மற்றும் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாகும்.
தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் 173 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) 173 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டன்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளது. கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ/ MBBS/ CA/ CMA/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்எம்ஓ: 33 ஆண்டுகள். […]