நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.