சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை.. தஞ்சை, நெய்வேலியில் இருந்து விமான சேவை!

air service

தஞ்சையில் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக  20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் … Read more

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பயங்கர தீ.! கன்வேயர் பெல்ட்அறுந்ததால் விபத்து.!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுரங்கம் 1ஏ பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இயந்திரத்தில் திடீரென தீ பற்றிக்கொண்டது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பல மணிநேரம் போராடினர். அதன் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

#BREAKING : என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம்- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நெய்வேலி என்எல்சி- க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது வரை என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள்,  9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவார்கள். என்எல்சி … Read more

NLC விபத்து- நாளை கடையடைப்பு.!

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்,  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. NLC நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், … Read more

#BREAKING: நெய்வேலி NLC விபத்து.! தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது- அமித்ஷா.!

நெய்வேலி NLC -ல் உள்ள  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த, விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.  இந்நிலையில், நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்து மன வேதனையை அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Anguished to learn about the loss of … Read more

NLC அனல்மின் நிலைய தீ விபத்து.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 அக உயர்வு!

NLC அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு. நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், … Read more

பாய்லர் விபத்து.! உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை.!

பாய்லர் வெடித்து உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை  தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம்  தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 2 வது அனல்மின் நிலையத்தில் அலகு 6-ல் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து  சார்புதீன் என்ற பணியாளர் … Read more

#Breaking: அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு.!

நெய்வேலியில் உள்ள என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனல் மின் நிலையம் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், 2022-ம் ஆண்டுக்குள் படிப்படியாக மூடவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் என்பதால் மூட உத்தரவு. இந்த நிலையில் முதலாவது அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது என … Read more

தங்க்ஸ் நெய்வேலி…செல்பியோடு நடிகர் விஜய் ட்விட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்  நேற்று வேன் மீது ஏறி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் … Read more