கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .