புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறப்பு விவகாரத்தில் சீனாவை இந்தியா முந்தி இருப்பதாக கூறியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்து இருப்பதாகவும், அதேசமயம் சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் கூறியுள்ளது. குழந்தைகளுக்கான […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சுவாரசியமான தகவல்கள். நாம் கொண்டாடும் ஆங்கிலப்புத்தாண்டு 500 வருடங்கள் முன்பில் இருந்து பின்பற்றக்கூடிய ஒன்றாகும். அதற்கு முன்பாக, அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மெசப்டோனியர்கள் என்பவர்கள் 2000 ஆண்டுகளாக மார்ச் 25-ம் நாளை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். மார்ச் 25-ம் நாள் இயேசுவின் தாய் […]
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கோவையிலும் […]
புத்தாண்டில் புதிய நட்புறவுடன் சீனா- ரஷ்யா 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். வரும் புத்தாண்டில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது 70-வது ஆண்டு நட்புறவில் அடியெடுத்து வைப்பதாக கூறியுள்ளனர். மேலும் சீனா மற்றும் ரஷ்யா அதிபர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இனத்தை சேர்ந்த ஆண்கள் கொண்டாடிய ”மோர்ட்வத்” என்று அழைக்கப்படும் வினோத திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம் தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்தில் புத்தாண்டு திருவிழாவை தோடர் இன மக்கள் சிறப்பாக கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு, முன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவிலான குல தெய்வ கோயிலில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து காணிக்கை செலுத்தி, தங்களுடைய […]
சென்னையில், புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விபத்தில்லா புத்தாண்டை உறுதி செய்வதற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரும் திங்கள் கிழமை இரவு 8 மணி வரை மட்டுமே மெரினா கடற்கரையில் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெசண்ட் நகர் […]
புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டையொட்டி, அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அனைத்து மாவட்ட காவல்துறைக்கும், முன்னெச்சரிக்கையாக இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையிட தனியாக போலீசாரை நியமிக்க […]
புத்தாண்டின் போது பைக் ரேஸுக்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாகல் செய்த பொதுநல மனுவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயிரிழப்பு காரணமாக பைக் ரேசுக்கு தடை விதிக்க கேட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாநகர் காவல் ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், புத்தாண்டில் […]