போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் வைத்திருக்கும் தற்காலிக தடுப்புகளையே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள், நெருப்புப் பொறி பறக்க இழுத்துச் செல்லும் அதிரவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல் துறை எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்த பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில், இதேபோல் அட்டகாசத்தில் ஈடுபட்ட 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் […]
சென்னையில் புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது என தமிழக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என புத்தாண்டுக்கு முன்பாகவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆண்டின் கடைசி நாளான டிசம்பர்.31 மற்றும் புத்தாண்டு முதல் தினமான ஜனவரி.1 ஆகிய இரு தினங்கள் மட்டுமே சுமார் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும் என முன்னெச்சரிக்கை நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்