Tag: newprimeminister

#BREAKING: மலேசிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் அறிவிப்பு!

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய பிரதமர் அறிவிப்பு. மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை அறிவித்தார் மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா. அதன்படி, மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றார். கடந்த வார இறுதியில் நடந்த தேர்தலில் அன்வரின் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது. ஆனால், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 112 இடங்களைப் பெற்ற நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் அல்லது எந்த கூட்டணியும் உருவாகவில்லை. எனவே, […]

AlSultan Abdullah 4 Min Read
Default Image

#BREAKING: வன்முறைக்கு மத்தியில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!

ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியிருந்தது. இதனிடையே, […]

newprimeminister 4 Min Read
Default Image

#JustNow: இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் சேதப்படுத்தி மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு […]

newprimeminister 5 Min Read
Default Image

#BREAKING: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு. பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை தொடர்ந்து, புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Pakistan 2 Min Read
Default Image