நேற்று திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தினமும் 85,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அவர் தெரிவித்தார். நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள புதிய திட்டபணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ளது.இதனிடையே 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார் .இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். நீலகிரியில் அமையவுள்ள 11வது புதிய மருத்துவக் கல்லூரி ஆகும். ரூ. 447 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. 40 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லூரி அமைகிறது.இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 […]
அரியலூரில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக 3,575 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் வழங்குகிறது.இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. […]
விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி, அர்ச்சனா, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். பின்னர் இதனிடையே விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. இது ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய நிதியை விட அதிமுக ஆட்சியில் ரூ.1548 கோடி அதிகமாக நிதி ஒதுக்கிடு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்கிறார் அது பகல் கனவாக தான் போகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து விருதுநகரில் அமைய உள்ள மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் விருதுநகரில் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு தன்னை முறையாக […]
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது. இன்று காலை ராமநாதபுரத்தில் புதியதாக மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.