மீண்டும் ஒரு புதிய இந்தியவை உருவாக்குவதற்கு மக்கள் எனக்கு வாய்ப்பளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து மீண்டும் மாபெரும் வெற்றியை தந்துள்ளனர்.இந்தமுறை நாம் பெற்றுள்ள மகத்தான வெற்றியை உலக நாடுகள் பலவும் வியப்புடன் பார்க்கின்றன. சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.க்கு உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக உபகரணங்கள் வாங்க ரூ.103.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோராக்பூர் ஐ.ஐ.டி – ரூ.151.19 கோடியும், டெல்லி ஐ.ஐ.டி – ரூ.105 கோடியும், மும்பை ஐ.ஐ.டி – ரூ.96.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.