வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், நாளை காலை புயலாக வலுபெறவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் நாளை மாலை அல்லது இரவில் […]
புரெவி புயல் சின்னம் காரணமாக சென்னை முதல் குளச்சல் வரை இருக்கும் 11 துறைமுககளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் காரணமாக சேதங்கள் அதிகம் இல்லை என்றாலும், பல இடங்களில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிவர் புயலின் தாக்கம் முடிவடைந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு […]
இன்று உருவாகிறது ‘புரெவி’ புயல் இதனால் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. தென் வங்ககடலில் 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று காலை புயலாக வலுப்பெறும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில் வருகின்ற நாளை மாலை இலங்கையைக் கடந்து குமாரி கடற்கரைக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதி கனமழை: […]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, மேலும் அது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் அதன் பெயர் “புரெவி” என பெயர் சூட்டப்படும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் […]