அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது […]