சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு உத்தரவு. எரிமேலி மற்றும் மணிமலை பகுதிகளில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சமரிமலை விமான நிலையம் அமைகிறது. செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள மேலும் 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. சபரிமலைக்கு […]
தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான […]
புதிய விமான நிலைய திட்டத்துக்காக மொத்தம் 11 இடங்களை ஆய்வு செய்தோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் […]
புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தகவல். சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தற்போது 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது என்றும் விமான […]
புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் புதிய பன்னாட்டு விமான நிலையம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்திற்கு […]
கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல். டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஆலோனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் […]