தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் அடுத்து இந்தி படமொன்றுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். “நடிகைகள் சினிமாவில் அறிமுகமாவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் மார்க்கெட்டை தக்கவைப்பதுதான் சவாலாக இருக்கிறது. எனக்கு தென்னிந்திய மொழிகளில் நல்ல கதைகள் அமைந்தன. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தார்கள். அவர்கள் என்னை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்போலவே கருதி ஆதரவு தந்தார்கள். இது பெரிய மகிழ்ச்சி அளித்தது. திரையுலகில் புதிது புதிதாக நிறைய நடிகைகள் வருகிறார்கள். […]