சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், 18 […]
நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு இடையூறாக வேகமாக வாகனம் ஓட்டியவர்களை எச்சரித்து அனுப்பினர். இவ்வாறு வாகனம் ஒட்டியது தொடர்பாகவும், அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களையும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதலே உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டுவது, வாகன ரேஸில் ஈடுபடுவது தொடர்பாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது. […]
போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் வைத்திருக்கும் தற்காலிக தடுப்புகளையே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள், நெருப்புப் பொறி பறக்க இழுத்துச் செல்லும் அதிரவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல் துறை எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்த பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில், இதேபோல் அட்டகாசத்தில் ஈடுபட்ட 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் […]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச்சில் அவருக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் புத்தாண்டைக் கொண்டாடினார். அவருடன் அவர் மனைவி மெலனியா, மகன் பாரன் உள்ளிட்டோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் ஸ்டீவ் மினுச்சினும் அவர் மனைவியுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். டிரம்பின் மகள் இவங்கா தனது கணவர் குஷ்னருடன் பாம்பீச்சில் புத்தாண்டை கொண்டாடினார்… source: dinasuvadu.com