அமெரிக்கா : நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக போர்பன் ஸ்ட்ரீட் பகுதியில் மக்கள் ஆட்டம் பட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில், வேண்டுமென்றே பிக்கப் டிரக்கை ஒரு நபர் வேகமாக அந்த பகுதியில் ஒட்டி கொண்டு அங்கிருந்தவர்கள் மீது மோதினார். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த […]
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ […]
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை நாட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது, இருவரும் தங்கள் துபாய் பயணத்தின் ஒரு பகுதியாக புத்தாண்டை கொண்டாடி தீர்த்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், அங்கு அவருடன் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பிர்ஜே ஆகியோர் இணைந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். Only Love 🫶🏻 all around 💓 […]
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பபுத்தாண்டை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல, நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாட்சா படத்தின் வசனத்தை […]
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டது. மெரினா கடற்கரை முழுவதுமாக காவல்துறை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டி.ஜி.பி. அலுவலகம் அருகே, தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் […]
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த நவம்பரில் மணிப்பூரில் உள்ள ஜிரிபாமில் மூன்று பெண்கள் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்தும் அங்கு பரபரப்பு நிலவி வந்தது. இவ்வாறு அம்மாநிலத்தில் தொடர் வன்முறையால், முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்புக் […]
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்று மதியம் 2:00 மணி முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து, காவல் துறை தலைவர் திரு அஜித்குமார் சிங்லா தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், புத்தாண்டை […]
நியூசிலாந்து : உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தயாராகி உள்ளனர். நம்மூரில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்த சரியாக 12 மணிக்கு நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவரில் வாணவெடிகள் வெடித்து மக்கள் கீழே கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சி காண்போரை திகைக்க வைத்தது. […]
கிரிபாட்டி: உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி (Kiribati) எனும் கிறிஸ்துமஸ் தீவில் (Christmas Island) புத்தாண்டு பிறந்தது. அங்கு 2024-ம் ஆண்டு நிறைவடைந்து, தற்பொழுது 2025ம் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் ஆகிய புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர் கிரிபாட்டி மக்கள், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் […]
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்படுகிறது. மேலும், கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நாளை (31ம் தேதி) புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை. எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான […]