பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.இதனால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தது.இதன் பின்னர் தான் ஜே.பி.நட்டா பாஜக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில் தற்போது பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.