டெல்லி : டெல்லியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேகவெடிப்பினால் இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கனமழை காரணமாக ராஜிந்தர் நகர், நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதே போல புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பகுதியில் மழைநீர் கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகியது. ஒழுகிய மழைநீரை வாளி வைத்து ஊழியர்கள் பிடித்துள்ளனர் […]
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மிக மோசமான பரவி வரக்கூடிய நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பிணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு […]
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த டாடா கட்டுமான நிறுவனம் ரூ.861.90 கோடிக்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது. முதற்கட்ட டெண்டரில் மும்பையை தளமாகக் கொண்ட லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து மூன்று நிறுவனங்களும் நிதி ஏலத்தில் கலந்து கொள்ள அறிக்கையை […]
புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு போட்டிகளில் இருந்த 7 நிறுவனங்களில் மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை “சிபிடபிள்யூடி” தெரிவித்துள்ளது. அவை, லார்சன் அண்ட் டூப்ரோ , ஷபூர்ஜி பல்லோன்ஜி கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகியவை புதிய நாடாளுமன்ற வளாகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற ஆன்லைன் நிதி ஏலங்களை சமர்ப்பிக்க தகுதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற […]