நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]