நாட்டில் உள்ள மக்களுக்கு சுவாசிக்கவே ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் பிரதமர் மோடிக்காக கட்டும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதன்காரணமாக,நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஒரே நாளில் 3.5 லட்சத்தை எட்டியுள்ளது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன்,படுக்கை வசதி மற்றும் போதுமான தடுப்பூசி மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு இறக்கின்றனர். இந்த நிலையில்,2022 […]
2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில்,அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு 2020 செப்டம்பர் 29 அன்று முடிவு செய்தது.இதற்கான ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி […]