Tag: New Education Policy

“புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை கல்வி நிதி தர முடியாது”- மத்திய அமைச்சர் திட்டவட்டம்.!

உத்தரப் பிரதேசம்: வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர். அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே […]

#Students 4 Min Read
Dharmendra Pradhan

புதிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு.? ஒன்றாக குரல் கொடுக்கும் திமுக – அதிமுக.! 

சென்னை : தமிழ்நாடு அரசின் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு இதுவரையில் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் இருமொழி கல்விக்கொள்கை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மாநில அரசுகளின் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதி வழங்கி வருகிறது. […]

#ADMK 11 Min Read
ADMK Chief secratary Edappadi Palanisamy - Minister Anbil Mahesh

மத்திய அரசை காப்பி அடிக்கும் தமிழக அரசு.?  அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு.! 

திருச்சி: மாநில அரசின் கல்வி கொள்கையில் பல்வேறு பகுதிகள் மத்திய கல்வி கொள்கையில் உள்ளது போல இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தேசிய கல்வி கொள்கை, தமிழக அரசின் புதிய மாநில கல்வி கொள்கை, நீட் நுழைவு தேர்வு என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களையும், மாநில அரசின் மீதான தனது விமர்சனங்களையும் முன்வைத்து பேசினார். அவர் கூறுகையில், திருச்சி […]

#Annamalai 7 Min Read
BJP President K Annamalai

அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.!

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்க தமிழகம் முயற்சி எடுத்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி இது குறித்து பேசிய பாஜக […]

central govt 5 Min Read
BJP State President Annamalai - TN Govt

#BREAKING: புதிய கல்விக் கொள்கை- தமிழக அரசு புறக்கணிப்பு..!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்து இருக்கிறது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த “கல்விக் கொள்கை-2020” -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது. 2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை அமல் […]

#TNGovt 4 Min Read
Default Image

#Breaking: புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு!

தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அசாமி, கன்னடம், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஜூலை 29-ம் தேதியன்று ஒப்புதல் அளித்தது. இதில் இளங்கலை படிப்பிற்கு மாணவர்கள் சேர வேண்டுமானால் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும், மாநிலங்களில் மூன்று மொழி கொள்கை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும், […]

New Education Policy 4 Min Read
Default Image

மே.வ புதிய கல்விக்கொள்ளைக்கு இடம் கிடையாது.மம்தா உறுதி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்பிதல் அளிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானார்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்றும் இக்கொள்கையில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று விளக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.

Kolkata 1 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கை: இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் காணொலி மூலம் இன்று காலை 11 பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை வரும் ஆண்டே  அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஆசிரியர்களை வாழ்த்தியும், புதிய கல்வி கொள்கையை முன்னோக்கி […]

#PMModi 4 Min Read
Default Image

கல்விக் கொள்கை: மாநிலங்களின் கருத்து திறந்த மனதுடன் கேட்கப்படும் – பிரதமர் மோடி உரை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துக்கள்  கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார். மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். […]

#PMModi 6 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கை: இன்று நடைபெறுகிறது ஆளுநர் மாநாடு.! பிரதமர் சிறப்புரை.!

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2020 புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் […]

Governors Conference 3 Min Read
Default Image

#BREAKING: புதிய கல்வி கொள்கை – செப்டம்பர் 7ல் ஆளுநர்கள் மாநாடு.!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொள்கின்றனர்.

Governors Conference 2 Min Read
Default Image

புதிய கல்விக்கொள்கை – விரைவில் தமிழக அரசு குழு அமைக்கும், செங்கோட்டையன்!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக விரைவில் தமிழக அரசு குழு அமைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி யோசிக்கும் […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கை: நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் – எம்.பி.கனிமொழி

நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும். திமுக எம்.பி.கனிமொழி அவர்கள், நெல்லை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது புதிய கல்வி  பேசியுள்ளார்.  அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை மூலம்  சமூக நீதிக்கு எதிரான கொள்கை முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள ஆபத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மொழிக்கு ஆதரவாக போரட்டங்களை முன்னெடுக்க […]

#DMK 2 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கை..உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்துகிறார்  கடந்த ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டது.இதன்மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை  புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. […]

K. P. Anbalagan 3 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கை.. நாட்டின் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது- கமல்!

நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. அது, பல்வேறு அறிவிக்களை கொண்டதாகவும், கல்வி முறையில் பெரிய மாறுதல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. இதற்க்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், புதிய கல்விக் கொள்கையில், […]

kamalhasan 3 Min Read
Default Image

6-ம் வகுப்பு முதல் தொழில் கல்வி, M.Phil படிப்பு நிறுத்தம்.. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைகள் இதோ!

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கையானது 21-ம் நூற்றாண்டுக்கானது என தெரிவித்தார். மேலும், நாட்டின் கல்வி கொள்கையில் 34 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது என தெரிவித்த அவர், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு நிறைவேற்றப்படும் […]

Central Government 6 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ?

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்  வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்  3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று […]

New Education Policy 3 Min Read
Default Image

இன்று கூடுகிறது புதிய கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கூட்டம் – திமுக தோழமை காட்சிகள் பங்கேற்கிறது

இன்று நாடாளுமன்றத்தில் கூடும் புதிய கல்விக்கொள்கை மீதான கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்கிறது. புதிய கல்வி கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட்  9 ம் தேதி மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் 3 வது எதிர்க்கட்சியாக இருக்கும் […]

#DMK 2 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் – மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கினர்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை க்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கைக்கு கருத்து தெரிவிக்கும் தேதி நேற்றுடன் முடியும் சூழலில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைவரிடம் இருந்தும் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் 5,000 […]

cpim 2 Min Read
Default Image

நடிகர்கள் சூர்யா மற்றும் ரஜினி ஆகியோர் மிரட்டப்படுகிறார்கள் – எம்பி வெங்கடேசன் பேச்சு!

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் ரஜினி ஆகியோரும் மிரட்டப்படுகிறார்கள் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமா அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்வி கொள்கை […]

Actor Rajinikanth 2 Min Read
Default Image