கிரேட்டர் நொய்டாவில் உள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். புதுடெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று (சனிக்கிழமை) 6 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித தீக்காயங்கள் இன்றி மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இது குறித்து கூடுதல் காவல் ஆய்வாளர் (commissioner of police) ரவிசங்கர் சாபி கூறுகையில், கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்து தீயானது […]
டெல்லியில் இன்று அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை தாங்குகிறார். இதைத் தொடர்ந்து,நாளை (ஏப்ரல் 30-ஆம் தேதி) விக்யான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்களின் கூட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடந்த 2016 இல் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் நீதி வழங்கல் […]
சவால்களை ஜனநாயக முறையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூறியுள்ளார். பிரதமர் மோடி அவர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடைபெறும் 82 வது சபாநாயகர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஜனநாயகம் என்பது […]
ஸ்வச் பாரத் மிஷன் 2.0 இன் நோக்கம் நகரங்களை குப்பை இல்லாததாக மாற்றுவதாகும் என்று பிரதமர் மோடி உரை. டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா 2.O திட்டத்தை (Swachh Bharat Mission-Urban 2.0) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக […]
டெல்லியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உயர்நிலை 2+2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை. இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். மேலும், இருநாட்டு உயர் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் விவகாரம், சர்வதேச அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு […]
டெல்லியில்,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 26 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில்,டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவரான அனாஸ் முஜாகித்(வயது 26).குருதேவ் பகதூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.இதனால்,வீட்டில் […]
டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து முழுமையாக நம்பும் வரை டெல்லி அரசு பள்ளிகளைத் திறக்காது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி செயலகத்தில் தனது சுதந்திர தின விழாவில் அவரது உரையை தொடங்கிய கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் கொரோனா நிலைமை இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி அரசுக்கு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்றார் . இந்நிலையில் ரவிந்த் கெஜ்ரிவால் […]
கொரோனாவை கண்டறிய இந்தியா இதுவரை 1 கோடி சோதனைகளை நடத்தியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR தெரிவித்தது. நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகள் 6,97,836 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி சுமார் 1,80,596 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது இதுவரை மொத்தம் 1,00,04,101 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ICMR அதிகாரி தெரிவித்தனர். ICMR மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 14 நாட்களில் சராசரி சோதனைகள் 2,15,655 கடந்த […]
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடை நடத்தி வரும் ஒருவர் முறையாக கடை வாடகை கொடுக்காமல் இருந்ததால் கடை உரிமையாளர் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.பின்னர் அந்த கடைக்காரர் மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த மின்சார வாரியம் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தது. அப்போது கடை உரிமையாளர் தனக்கு தெரியாமல் கடைக்காரர் இணைப்புக் கொடுத்து பயன்படுத்தியதாக மின்வாரியத்திடம் கடை உரிமையாளர் கூறினார். பின்னர் வாடகைக்கு இருந்த கடைக்காரன் மீது மின் வாரியம் […]
டிவிஎஸ்(TVS) நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற முதல் பைக் மாடல் என்ற பெருமையும் […]
புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை 1950 ஆம் ஆண்டு அமல்படுத்திய தேதிக்கு மரியாதை செலுத்துவதற்காக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் இந்தியா கேட்டில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தை கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் நுழைவாயில் நடைபெறும் அணிவகுப்பு என்பது மிகவும் சிறப்புவாய்ந்தாக இருக்கும். எப்பொழுதும் குடியரசு விழாவில் இரு […]