இந்திய ராணுவத்துக்காக கமோவ் (kamov)ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அக்டோபருக்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது காமோவ் Ka – 226T ரக ஹெலிகாப்டர்களை இணைந்து தயாரிக்கும் திட்டத்திற்கு பரஸ்பரம் இருநாடுகளும் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தற்போது இந்த ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் […]