சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது, இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் ரூ.600 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240 பேருந்துகளை, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது. இதில் பல சிறப்பம்சங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து பேசிய […]
தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய 40 பேருந்துகள், கழிவறை வசதியுடன் கூடிய 20 பேருந்து உட்பட 2,000 பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் மே மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.