ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பை கெஜெட் பிரியர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் ஐபோனுக்கான அடுத்த அப்பேட்டில் என்.எஃப்.சி என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் அருகே உள்ள மற்றொரு பொருளுடன் தொடர்பு கொள்ள உதவும். இதன் மூலம் கதவை தானாகத் திறக்க ஐபோன்களைப் பயன்படுத்தும் வசதி கிடைக்கும். அதற்கு ஐபோனில் பிரத்யேக சிப் ஒன்றை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இதே போன்ற சிப் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதவுகளை ஐபோன் மூலம் திறக்கலாம். […]