இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் நாகை மீனவர்களை மிரட்டி 3 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் காலனியை சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மணியன் தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் திடீரென தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர். அதன்பின் கத்தி, […]