சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை போராட்ட வீரரும், வங்கத்துச் சிங்கம், இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று மக்களால் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது வீரத்தை போற்றி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தங்களது இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். […]
சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளன நாட்டின் சுதந்திர போராட்ட காலத்தில், இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் இளைஞர்கள் பலருக்கும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவ பயிற்சி அளித்தவர், சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேயருக்கு எதிரான இவரது வீரம், தலைமை பண்பு ஆகியவற்றால், ‘நேதாஜி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். நேதாஜி […]