இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர் […]
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை துவங்கி இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை வீரர்களை ஒருங்கிணைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் […]
இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பராக்ரம் திவாஸ் அன்று (ஜனவரி 23) நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறக்கப்பட்ட அதே இடத்தில், பிரதமரால் திறக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்படும். நேதாஜியின் பிரமாண்ட சிலை 280 மெட்ரிக் டன் எடையுள்ள கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் […]
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,”சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. […]
டெல்லி:இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி இன்று இடமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “நேதாஜி சுபாஷ் […]