21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமல்படுத்தல் குறித்த பார்வையாளர் மாநாட்டில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கல்வி கொள்கை 2020 அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஒரு சமமான மற்றும் துடிப்பான அறிவு சமுதாயத்தை வளர்ப்பதற்கான பார்வையை அமைக்கிறது. 21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்வி கொள்கை […]
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார். மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். […]
மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து […]