பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அப்போது, பாஜகவினர் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தி, காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகி […]