சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். நெல்லை டவுண் பகுதியில் உள்ள முர்த்திம் ஜர்கான் தர்காவில் இன்று காலை தொழுகை முடித்துவிட்டு டவுண் காட்சி மண்டபம் அருகே ஜாகீர் உசேன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது . நிலத்தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]