நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மூவரின் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை […]
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி அவர்களின் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பலகட்ட விசாரணை, தடையங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகனான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாலும், நீங்க பொலிஸ்தானே முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறியதும் போலீஸ்காரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. […]