காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது வரையிலான நிகழ்வுகளில் தொகுப்பு. கடந்த மே மாதம் 4ஆம் தேதி உவரி காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வருகிறது. அதில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2ஆம் தேதி முதல் காணவில்லை என்றும் கடைசியாக மே 2ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவரது மகன்கள் ஜெஃப்ரின் மற்றும் மார்ட்டின் ஆகியோர் இந்த புகாரை தெரிவிக்கின்றனர். […]