தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டி வயது 70.இவர் கடந்த சில ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வருகிறார்.அவருக்கு கிடைக்கும் பணத்தை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள்,தொழிலாளர்கள்,பள்ளிகள் என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் பூல்பாண்டி தான் யாசகத்தின் மூலம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு விடம் வழங்கினார்.இவர் சிலமாதங்களுக்கு முன்னர் மதுரை கலெக்டரிடம் 2 லட்சத்து […]
நெல்லை ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி. நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இவர் இந்த ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு இவருடைய தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், இவரது தந்தை திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாள் இரவே உயிரிழந்தார். இது தெரிந்தும் அதிகாரிகள் யாரிடமும் இந்த தகவலை தெரிவிக்காமல், கடமை தவறாமல் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் […]
திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி புஷ்கரணி திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.மேலும் 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரணி திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது. மேலும் இது குறித்து கூறிய அவர் வெள்ள பெறுக்கு இருக்கும் என்பதால் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை […]
நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். பொதுமக்களும் இப்பொருள்களை ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர்..இதுபோன்ற புதுமையான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம் வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர் இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் […]