அகில இந்திய மகளீர் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக நீட்டா டிசோஸா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மக்களவை எம்.பியான சுஷ்மிதா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார். இவர், விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு அனுப்பி வைத்தார். மகிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதையடுத்து, சுஷ்மிதா அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், […]