மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பமாக மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த […]
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என பார்ப்போம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். திருச்சியில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், நீட் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது. உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுமா என நாம் மட்டுமல்ல, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள். நடைபெறுமா? என பார்ப்போம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.