BREAKING : நீட் தேர்வு முடிவு – புதிய பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் புதிய பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களி ல் குளறுபடி ஏற்பட்டதால்,  இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதாவது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில், உத்திரகாண்ட், … Read more

நீட் தேர்வில் புதிய சாதனை படைத்த தமிழக அரசு பள்ளி மாணவன்!

தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித் குமார், நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள். இந்தநிலையில், நீட் தேர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் 56.44 … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . அரசு பள்ளி … Read more

#Breaking: நீட் தேர்வு முடிவுகள் அக்.16 ஆம் தேதி வெளியாகும்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுக்கு, அக்.16 ஆம் தேதி வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள். கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சிலர் தேர்வு எழுத முடியாமல் … Read more

நீட் பலிபீடம்: உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – மு.க. ஸ்டாலின்.!

நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – முக ஸ்டாலின். நாடு முழுவதும் திட்டமிட்டபடி நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும், நடப்பாண்டு தேர்வு நடந்து முடிந்தது. இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து … Read more

நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வு … Read more

“மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம்!”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மதுரையில் நேற்று பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த திறன் மேம்பாட்டு … Read more

#BREAKING: நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – ஐகோர்ட்

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்வோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. நிவாரணம் வழங்கும் அரசு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு, அரசியல் கட்சிகள் நிதி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை … Read more

நாடு முழுவதும் நிறைவடைந்த நீட் நுழைவுத் தேர்வு..!

இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. பல சர்ச்சைகளுக்கு இடையே, நீட் தேர்வுகள் நடந்து முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வர்கள் அனைவரும் தேர்வுகளை எழுதினார்கள். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. கொரோனா பரவலுக்கும் மத்தியில், திட்டமிட்டபடியே நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது … Read more

நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் இரங்கல்.!

‘நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு’ என நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகிறனர். அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், இந்த நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் … Read more