முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்னதாக மார்ச் […]
தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் P.E.T […]
கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார். தீபாவளி […]
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் பொது நுழைவுத் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டியுள்ளது. இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் மாநிலத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனை பொருட்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. நீட் விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]
இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றார். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று , நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து வாங்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் பொருட்டு காங்கிரஸ் தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவதற்கு […]
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த நீட் தேர்வு தோல்வியால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆதலால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை கொண்டு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு […]
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக தான் […]
இந்தியாவில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளை பயில நீட் எனும் பொது நுழைவு தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் பதியப்பட்டன. தற்போது கூட நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்க போராட்டத்தை ஆளும் திமுக அரசு ஆரம்பித்தது. இந்த நீட் தீர்வு காரணமாக, […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை நான் ஆமோதிக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை சொல்ல தகுதி மற்றும் நேர்மை ஆளுநருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். வல்லபாய் படேலுக்கு சிலை வைத்துள்ளார். அதே வ.உ.சி-க்கு சிலை வைத்திருக்கிறாரகளா? […]
மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இந்திய அளவில் பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இதனை எதிர்த்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சில மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் சோக நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுவதாக கூறி அதனை தமிழகத்தில் தடை செய்ய ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு, சட்டப்பேரவையில் தீர்மானம் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது […]
நீட் தேர்வு ஒழிப்பிற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது. நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். நீட் தேர்வு எதிர்ப்புக்கு […]
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி அவர்கள், நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க […]
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி இந்த இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி அவர்கள், தனது எக்ஸ் தள பக்கத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று […]
இந்தியா முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய பொது கவுன்சிலில் பங்கேற்பர். மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் குறிப்பிட்ட அளவு அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், மீதம் உள்ள குறிப்பிட்ட அளவு இடங்கள் மத்திய அரசுக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என சேர்த்து […]
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வில் […]
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ மெயின் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜெ.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், இந்த தேர்வு முதல்கட்டமாக ஜனவரி மாதமும், இரண்டாம் […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் நீட் பயிற்சிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.இந்த வருடத்திற்கான வகுப்புகள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை […]
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் […]
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, தேர்வுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதிய உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பள்ளிகளில் […]
நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.? ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? – சீமான் கருத்து. இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நீட் தேர்வு, ஆ.ராசாவின் மனு தர்மம் பற்றிய கருத்துகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினார். மனுதர்மத்தில் சூத்திரர்கள் பற்றி எம்.பி ஆ.ராசா பேசுகையில், நாமெல்லாம் விபசாரி மகன் என்று […]