உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக 2023ல் முதுகலை நீட் படிப்புகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. […]
நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு பழைய பாடத்திட்டப்படி நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதுகலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-சூப்பர் ஸ்பெஷாலிட்டி (நீட்-எஸ்எஸ்) 2021 பழைய முறைப்படி நடத்தப்படும் என்றும் புதிய முறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் மத்திய அரசு இத்தகைய […]