நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ்மோசடியில் பல் மருத்துவரும், மாணவியின் தந்தையான பாலச்சந்திரனை பெரியமேடு போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த பல் டாக்டர் பாலச்சந்திரன் என்பவரின் மகள் தீக்ஷா, தனது தந்தையுடன் கடந்தாண்டு டிசம்பர் 7 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த மாணவி தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. […]