நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல எனவும்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் […]
மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது எனவும்,நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் […]
சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம்,நீட் தேர்வால் பாதிப்புள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்துள்ளனர் என்று நீதிபதி ஏ.கே.இராஜன் கூறினார். நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில்,8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனையடுத்து,நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக,சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் முதல் […]