நீட் தேர்வு மோசடியியில் முதன் முதலாக, தேனி மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த உதித் சூர்யா எனும் மாணவன் கைது செய்யப்பட்டார். மேலும், உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் வெங்கடேசனின்நண்பரான சரவணகுமாரும் தன் மகன் பிரவீனை நீட் தேர்வு மோசடியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் அவர்களும் சிபிசிஐடி விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர். இவர்களிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில், இடைத்தரகர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் […]
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் போதுமான கட் ஆப் மதிப்பெண் இல்லை. இதனால், மருத்துவம் படிக்கலாம் என்ற கனவோடு இருந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. இறுதிவரை இடம் கிடைக்கும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து ஏமாற்றமே மிஞ்சியது. […]
தமிழக அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த ஒரு மாணவருக்கு கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 12 ம் வகுப்பு முடிந்ததும் மருத்துவம் படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வு உள்ளது. வெளியில், பல தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வுக்கு என்று பயிற்சி அளித்து வருகிறது. அது போல், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளிலே சிறப்பு பயிற்சி […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. MBBS மற்றும் BDS இந்த ஆண்டு படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 5 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் நீட் எழுதிய 1.23,078 பேரில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். மேலும் அரசுப் பள்ளியில் பயின்று […]
நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.கடந்த மே மாதம் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இன்று நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது.தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் […]