அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா செயலியான டிக்டாக்கிற்கு செப்டம்பர் வரை கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார் . டிக்டாக் செயலிக்கு இந்த ஆண்டு மோசமான காலமாக அமைந்துள்ளது .இந்தியாவில் டிக்டாக் செயலி உட்பட 59 செயலிகளை மத்திய அரசு தடைசெய்துள்ளது .இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் கை தடைசெய்ய டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார் .கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற தகவல் வெளியானது,இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கி சமூகவலைதளத்தில் கால்பதிக்க தீவிரம் காட்டிவருகிறது. […]