ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அரசின் முக்கிய நோக்கங்கள். இன்றைய அரசு மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்காக அழுகிற அரசியல்வாதிகளின் காலம் காமராஜர் போன்ற நேர்மையான ஆட்சியாளர்களின் காலத்திலேயே முடிந்துவிட்டது. இன்றைய அரசு, தங்களுக்காக தாங்களே ஆளும் அரசு தான் இன்று உள்ள அரசியல்வாதிகள். மக்களை மக்களாக பார்க்கும் காலம் மலையேறி போய் விட்டது. இந்த அரசு மக்களை அடிமைகளாக தான் பார்க்கிறது. ஹைட்ரோகார்பன்: ஹைட்ரோகார்பன் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த கலவை. ஹைட்ரஜன், கார்பன் அணுக்களின் […]
நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துவருகின்றது . இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிக பெரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் விவசாயம் பாதிக்கப்படும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படும் என்பது அங்கு வாழும் மக்களின் அச்சமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள்: இந்த திட்டமானது Directorate general of hytrocarban என்ற அரசு நிறுவனத்தின் மேற்பார்வையில் தொடங்கியது. இதன் பணி நாடு முழுவதும் சோதனை செய்து ஹைட்ரோகார்பன் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதே […]
அரசியல்வாதிகள் மக்களுக்காக ஆட்சி நடத்தும் முறைக்கு முற்றுபுள்ளி வைத்து, தற்போது தங்களுக்காக ஆட்சி நடத்துகிற நிலையில், இன்றைய அரசியல் நிலைப்பாடு உள்ளது. கடந்த சில வருடங்களாக மக்கள் தங்கள் உரிமைகளை போராடி தான் பெற்று வருகின்றனர். தனி மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகினறனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரச்சனைகள் தலை தூக்கிய வண்ணம் தான் உள்ளது. ஜனநாயக தேசத்தில் மக்களின் கருத்துக்களை அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்பதற்க்கே மக்கள் பல போராட்டங்களை கையில் எடுக்கின்றனர்…! இன்று மக்கள் […]
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ரவி என்பவரது வயிலில் போடப்பட்டுள்ள மோட்டாரில் தண்ணீரோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, […]
திருவிடைமருதூர்: கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதை நிறுத்தக்கோரி, தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அங்குள்ள அய்யனார் கோயில் திடலில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்புகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின்போது கதிராமங்கலம் மண்ணை பாதுகாக்க துர்க்கை அம்மன் கோயிலில் பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இன்று 132வது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யக்கோரி புதுகை மாவட்டம், நெடுவாசலில் இன்று 170வது நாளாக பொதுமக்கள் போராட்டம் […]
புதுக்கோட்டை:நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 143-வது நாளாக அப்பகுதியினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி தினமும் வெவ்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 143-வது நாளாகவும் […]
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் நெடுவாசல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அதில் ஒவ்வொரு […]
புதுக்கோட்டை, ஆக.15- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 125வது நாளாக திங்கள்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்தது.இரண்டாம் கட்டமாக 125-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டம் 71-ஆவது சுதந்திரதினமான இன்றும் (15.08.2017) காலை […]