திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையில் வ.உ.சி நகர் 11-வது தெருவில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. இதில், புதைந்த வீடுகளுக்குள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம், புயல் கரையை கடந்த செய்தி ஆறுதலை தந்தாலும், மறுபுறம் விழுப்புரம், […]
கடலூர்: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் தரைப் பகுதியில் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதுவரை 18 செ.மீ., மழை பதவாகியுள்ளது. கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழையால் கருவடிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ள நிலையில், புதுவை, […]
செய்ப்பூர் : ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தின், பாண்டிகுய் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, அருகில் இருந்த 35 அடி மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் மீட்புப்படையினரை வரவைத்து மீட்பு பணியை துரித படுத்தினர். ஆனால், மழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் கடந்த 18 மணி நேரமாக ஈடுபட்டனர். சிறுமியை மீட்கும் முயற்சி […]
வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவம், மாநில மீட்புப்படையினர் ஆகியோரும் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மீட்பு படையினரும் இன்னும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணில் […]
வயநாடு நிலச்சரிவு : தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பெய்த கனமழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் 5-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வயநாட்டின் சூரல் மலை பகுதியில் இருந்து 4 மீட்டர் தொலைவில் இருந்த படவேட்டிக்குன்னுவில் பகுதியில் 4-வது நாளாக இந்திய ராணுவபடை மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டு […]
கேரளா : கடந்த ஜூலை-29 ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டில் பல இடங்களில் கடும் நிலச்சரிவானது ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகள், நிலச்சரிவில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியானது 5-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகள் இடிவதனால், மரங்கள் சாய்வதனால் போன்ற இடையூறுகளால் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமலே இருக்கிறது. இப்படி ஒரு மோசமான பேரிடரை சந்தித்த […]
கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியிருப்போரை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு 3வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது. இன்னும் 240 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் : முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, […]
வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள், இறப்பு விவரங்கள் ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில் , நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது வரலாறு காணாத மற்றும் வேதனையளிக்கும் பேரழிவு ஆகும். இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் […]
வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு , கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், தமிழக மீட்புப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நாளையும் வயநாடு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை […]
வயநாடு நிலச்சரிவு : நேற்று அதிகாலை கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டைக்கை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நிலச்சரிவு துயரத்தின் பாதிப்பை உணர்ந்ததும், மாநில மீட்பு படையினருடன், மத்திய மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர் நேற்று முதலே […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில், முண்டைக்கை பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 மணி அளவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதிக்கு செல்ல கூடிய பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சூரல்மலை பகுதியில் தான் சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்றும், அங்கு […]
உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் இருக்கும் சாமியார் சத்சங்கம் நிகழ்ச்சியானது நேற்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், பலர் மூச்சி திணறி அங்கேயே மயங்கியுள்ளனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் […]
உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலராய் எனும் கிராமத்தில் நேற்று போலே பாபா எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். […]
டெல்லி: தேசிய மீட்புப்படை வீரர்களின் 2வது மலையேற்ற விஜய நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கூறுகையில், தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) பணியார்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியை கூறுகிறேன். அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து இருந்த உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் கிடைத்துள்ளது. மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையானது 40 சதவீதம் வரை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது […]
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், புயல் மீட்பு பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுக்களை சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, விஜயவாடாவில் வந்துள்ள […]
ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 3.4 […]
உத்திரபிரதேச மாநிலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் புதியதாக 100 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய பேரிடர் மேலாண்மையில் மீட்பு பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ் என் பிரதான் அவர்கள் பெண்கள் முழுமையான மீட்பு பணியாளராக பயிற்றுவிக்கபடுவார்கள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரப்பிரதேச அரசு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரை அழைத்தபோது பெண்கள்தான் அங்கு சென்று மீட்பு […]