ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் செய்து வரும் நிலையில், அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து தேசிய ஜனாயக கூட்டணி பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது வரை, இடைத்தேர்தலில் திமுக, நாதக […]