புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இதனால் 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து விட்டு, B.Ed பயிலும் மாணவர்களின் வசதிக்காகவும், ஆசிரியர்களின் […]
தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கி பல்கலைக்கழக நிர்வாக குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் என்றும் மே மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 3 அரசு உட்பட 41 பி.எட் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதி குறைபாடு, ஆசிரியர் தட்டுப்பாடு, உட்பட பல புகார்கள் எழுந்துகொண்டே வந்தது. அந்தவகையில், சம்பந்தப்பட்ட அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதற்க்கு 21 நாட்களில் பதிலளிக்க வேண்டும் […]