சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் மற்றும் கிரண்டுல் கிராமங்களுக்கிடையே பாதுகாப்பு படை வீரர்கள் சாலை கட்டுமான பணிக்கான பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.