பாகிஸ்தான் நாடளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அதே நேரம் இம்ரான் கானுடன் தொடர்புடைய சுயேட்சைகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேட்சைகள், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் […]
பாகிஸ்தான் நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை திரைப்படத்தை மிஞ்சும் வகையில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. முன்னதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார். அவர் தலைவராக உள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பேட் சின்னம் கூட தேர்தல் ஆணையத்தால் முடக்கபட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் வேட்பாளர்கள் பல்வேறு சின்னங்களிலும், சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர். முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், […]
பாக்.,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய அந்நாட்டு அரசு லண்டனுக்கு ‘வாரன்ட்’ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், 3 முறை பிரதமராக இருந்து வலம் வந்தவர் நவாஸ் ஷெரீப், வயது 70. கடந்த, 2018 ஜூலை மாதம், ஊழல் வழக்கில் இவர்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சப்தாரும் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலையில் இருந்த […]