மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது அந்த படகின் மீது இந்திய கடற்படை படகு ஒன்று வேகமாக மோதியதில் கோர விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை தரப்பில் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான படகு எஞ்சின் சோதனைக்காக இன்று பிற்பகல் கடலுக்குள் சென்றது. அப்போது எதிர்பாரா விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரே நாளில் 37 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், இன்று நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை கைது செய்த மீனவர்கள் 37 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய […]
கடற்படைக்கு சொந்தமான 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா அதிகாரிகள். இந்தோனேஷிய கடற்படையைச் சோ்ந்த கே.ஆா்.ஐ. நங்காலா – 402 நீா்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே கடந்த புதன்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 200 மீட்டா் ஆழம் வரையிலான அழுத்தத்தை மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடிய அந்த நீா்மூழ்கிக் கப்பல், 600 முதல் 700 மீட்டா் வரையிலான ஆழத்துக்கு அது சென்றிருக்கலாம் […]
பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும் என கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி தெரிவித்துள்ளனர். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தீவிரமடைந்து வருகிறது. அங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,723 ஆகவும், 269 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, தற்போது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார […]
ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய படகுகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவியுள்ளார். உலகமே பெரும்தொற்றான கொரோனா வைரஸில் இருந்து மீள முடியாமல் திணறி வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான போர் பதற்றம் இப்போதும் நிலவி வருகிறது. இந்த இரு நாட்டிடையே அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. பின்னர் பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் […]
மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக அத்திக்கரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையி பாதிக்கப்பட்டவர்களை கடற்படை தளத்தில் உள்ள […]
ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கடற்படை அதிகாரிகள் அளவிலான பணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்திர பணி தர ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பெண்களுக்கு கடற்படையில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் […]
ராமேஸ்வர மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ஜேசு அலங்காரம் என்ற மீனவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் இலங்கை படையினர், தமிழக மீனவர்களை […]
இந்திய ராணுவத்தில் முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவி அண்மையில் தான் உருவாக்கப்பட்டது. அதில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு […]
பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை. இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், கடற்படை இடங்களில் அதன் ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கடற்படை தலைமையகம், கடற்படை தளங்கள், கப்பல் பராமரிப்பு தளங்கள் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக திரும்பிச் செல்லுமாறும் எச்சரிக்கை. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் மீனவர்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையையொட்டி உள்ள கடல் பகுதியில் அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் எல்லை, எனவே மீன்பிடிக்க அனுமதி இல்லை, உடனே இங்கிருந்து செல்லுங்கள் என […]
சென்னை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஓன்று நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.அதில் இருந்த கடற்படை வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வருகின்றனர். இந்நிலையில் அந்த கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஜோகேந்தர் , விவேக் , கமல் , விஷ்வாகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விவேக் வீசிய பந்து ஜோகேந்தர் நெஞ்சில்பட்டது. இதில் பந்து அடித்த உடனே ஜோகேந்தர் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி […]
இலங்கை, திருகோணமலை கீரைத்தீவுவில் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை நாட்டில் உள்ள திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் உள்ள மணலை சட்டவிரோதமாக கடத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மணல் கடத்தல் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு பேர் கடலில் குதித்தனர். இதையடுத்து கடலில் குதித்தவர்களை நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அங்கு திரண்ட பொதுமக்கள் கடற்படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 12 கடற்படை […]