இந்தியாவின், நவி மும்பையில் விரைவில் சர்வதேச தரத்தில் ரக்பி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையின் கார்கர் மைதானத்தில், சர்வதேச தரத்திலான ரக்பி மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மைதானத்தின் மேம்பாட்டிற்காக, நகர மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகமான சிட்கோ இந்திய ரக்பி கால்பந்து யூனியனுக்கு நிலத்தை ஒதுக்கியுள்ளது. ரக்பிமைதானத்திற்காக 11 ஆண்டு குத்தகைக்கு 3.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ரக்பி விளையாட்டு, பிரபலம் இல்லை என்றாலும் மேற்கு […]
மாநிலங்களுக்கிடையேயான பைக் திருட்டு வழக்கில் நவி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. திருடர்கள் எப்படி நவீன முறையில் யோசித்து திருடுகிறார்களோ அதேபோல திருடர்களை பிடிப்பதற்காக காவலர்களும் நவீன முறையில் யோசித்து தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு யுக்திகளை கையாண்டு திருடர்களை வெற்றிகரமாக பிடித்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்வதில் காவலர்களின் […]